Tue. Sep 27th, 2022

15 வது ஐபிஎல் சீசன் 51 வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் இஷான் கிஷான் 45 (29) ரன்களும், ரோஹித் சர்மா 43 (28) ரன்களும், டிம் டேவிட் 44 (21) ரன்களும் எடுத்தனர். 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. குஜராத் அணியில் சஹா 55 (40) ரன்களும், கில் 52 (36) ரன்களும் எடுத்தனர். மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Hits: 4

Leave a Reply

Your email address will not be published.