Fri. Mar 29th, 2024

மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் சென்னை ஐஐடியில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வருகிறார். இதே பிரிவில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர்கள் கிங்ஷூக்தேப் ஷர்மா, சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ 2017ம் ஆண்டு முதல் மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து புகார்தெரிவித்த மனைவியை பேராசிரியர் எடமன பிரசாத் சாதி ரீதியாக அவமானப்படுத்தி தொடர் தொந்தரவு கொடுத்துள்ளார். அதன்பின்னர் கிங்ஷூக்தேப் ஷர்மா மாணவியை இரண்டுமுறை பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார். கல்வி சுற்றுலா சென்ற இடத்திலும் கிங்ஷூக்தேப் ஷர்மா மாணவியை அறைக்குள் அடைத்து அந்தரங்க பகுதிகளை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை வைத்து கிங்ஷூக்தேப் ஷர்மா மற்றும் அவரது நண்பர்கள் மாணவியை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அந்த மாணவி ஐஐடியில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த மாணவர்கள் வளாகத்திற்குள் வர தடை விதிக்கப்பட்டனர். ஆனாலும் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த மாணவி மூன்று முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதன்பின்னர் அவர் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பின்னர் வழக்கு சென்னை காவல்துறையிடம் வந்து 8 பேர் மீது வழக்கு போடப்பட்டது. வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது, மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கு விசாரணைக்குழுவினருக்கு காட்டினர். பின்னர் விசாரணையில், ஆய்வக வழிகாட்டி ஒருவர் தன்னை பலவந்தமாக தள்ளிவிட்டு தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டினர். இதுகுறித்து ஐ.ஐ.டி நிர்வாகத்திடம் புகார் அளித்தபோது, அதற்கு அவர்கள் தன்னிடம் ஆதாரங்கள் கேட்டனர். உன்னை பாலியல் பலாத்காரம் செய்ததற்கான ஒரு புகைப்படம் கூட உன்னிடம் இல்லையா என்று கேட்டனர் என கூறினார்.

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *