Sat. Sep 24th, 2022

15 வது ஐபிஎல் சீசன் 46 வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் புனேவில் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ்:
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட்டும், கான்வெயும் இணைந்து ஐதராபாத் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 202 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 99 (57) ரன்னும், கான்வெய் 85 (55) ரன்னும் அடித்தனர். ஐதராபாத் அணி சார்பாக நடராஜன் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்:
203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி வீரர்கள் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக பூரான் 64 (33) ரன்னும், கேன் வில்லியம்சன் 47 (37) ரன்னும் அடித்தனர்.

சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

Hits: 8

Leave a Reply

Your email address will not be published.