Fri. Apr 19th, 2024

15 வது ஐபிஎல் சீசன் 37 வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 103 (62) ரன்கள் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரங்களில் அவுட் ஆகி வெளியேறினர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் ரோஹித் சர்மா 39 (31) ரன்களும், திலக் வர்மா 38 (27) ரன்களும் அடித்தனர். அவர்களை தவிர மற்ற அனைவரும் சொற்ப ரங்களில் வெளியேறினர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. மும்பை அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.

லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Visits: 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *