Thu. Apr 25th, 2024

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை “ரயில்வேயில் கருணை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலம் பத்தாம் வகுப்புக்கு குறைந்த கல்வித் தகுதி உடையவர்கள் வேலையில் நியமிக்கப்பட்டார்கள் . அவர்கள் பயிற்சியாளர்கள் என்ற பெயரில் நியமிக்கப்பட்டார்கள் . அவர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டாலும் நிரந்தரம் அளிக்கப்படாமல் இருந்தது .அவர்கள் ஐந்தாண்டுகளில் பத்தாம் வகுப்பு தேர வேண்டும் என்பது நிபந்தனையாக இருந்தது .கோவிட் போன்ற காரணங்களால் அவர்கள் இந்த கால அவகாசத்துக்குள் பத்தாம் வகுப்பு தேரமுடியாமல் வேலைநீக்கம் செய்யப்படும் அபாயம் இருந்தது .

இது குறித்து நான் ரயில்வே அமைச்சருக்கு அவர்களின் கல்வித்தகுதி நிபந்தனையை ஒருமுறை விலக்கு அளித்து அவர்களை நிரந்தரம் செய்யவோ அல்லது அவர்கள் கல்வித் தகுதி பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கவோ உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டேன் .

இப்போது ரயில்வே அமைச்சர் எனக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வதற்கான கால அவகாசத்தை மே 2023 வரை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளதாக பதில் அளித்துள்ளார் .

இதன் மூலம் கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள் . இந்த உத்தரவை நல்கிய ரயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் . இந்த கோரிக்கையை எனது கவனத்துக்கு கொண்டு வந்த தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சங்கத்துக்கு பாராட்டுக்கள் .”

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *