Thu. Oct 6th, 2022

15 வது ஐபிஎல் சீசன் 35 வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

குஜராத் டைட்டன்ஸ்:
தொடக்க வீரர்கள் சொதப்ப மிடில் ஆர்டரில் வந்த கேப்டன் ஹர்டிக் பாண்டியா 67 (49) தனது பொறுப்பான ஆட்டத்தால் அணி ஓரளவு நல்ல ஸ்கோர் எட்டியது. 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய ரசல் 4 விக்கெட்டும், சவுதி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு குஜராத் பந்துவீச்சாளர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். கொல்கத்தா அணியில் ரசல் 48 (25) ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

குஜராத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Hits: 4

Leave a Reply

Your email address will not be published.