Thu. Oct 6th, 2022

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மதுரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தஒப்பந்த தொழிலாளர்கள் சரவணன் சிவக்குமார், லக்ஷ்மணன் ஆகியோர் விஷ வாயு தாக்கி ஒருவர் பின் ஒருவராக தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

எத்தனை நாட்கள் கழிவுநீர் தொட்டியை மனிதர்களால் சுத்தப்படுத்த போகிறோம். சுத்திகரிப்பு இயந்திரங்களை வாங்க தமிழக அரசு தயங்குவதற்கு காரணம் என்ன? மனித உயிரை விடவா இயந்திரத்தின் விலை அதிகமாகிவிட்டது?

தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்தின் தகவல் படி, இந்தியாவில் அதிகப்படியான உயிரிழப்பு தமிழகத்தில் தான் நடைபெறுகிறது என்பது வருந்தத்தக்க செய்தி.

குடும்பத்திற்கு இழப்பீடும் அரசுப் பணியும் தந்து ஆதரிக்க வேண்டும் என்று மாநில அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்!”

Hits: 0

Leave a Reply

Your email address will not be published.