Thu. Apr 25th, 2024

15 வது ஐபிஎல் சீசன் 32 வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர்:
தொடக்க ஆட்டக்காரர் அனுஜ் ராவத் சொதப்ப கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 96 (64) ஆட்டத்தை தன் கையில் எடுத்து விளாசி தள்ளினார். கோஹ்லியும் சொதப்ப அவர்பின் வந்த வீரர்கள் தங்களது பங்குக்கு மேக்ஸ்வெல் 23 (11), அஹ்மத் 26 (22) ரன்கள் அடித்து அணியை நல்ல ஸ்கோர் அடிக்க வைத்தனர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. லக்னோ சார்பில் சிறப்பாக பந்துவீசிய சமீரா 2 விக்கெட்டும், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராகுல் 30 (24) ரன்களில் அவுட் ஆகினார். அவர் பின் வந்த க்ருனால் பாண்டியா 42 (28) மட்டும் அடித்து ஆட மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. பெங்களுர் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஹேசல்வுட் 4 விக்கெட்டும், ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *