Thu. Oct 6th, 2022

சு.வெங்கடேசன் எம்.பி எழுதியுள்ள கடிதம் “தமிழகத்தில் மகேந்திரகிரியில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாகம் , இரண்டு பணி நியமன அறிவிக்கைகளை வெளியிட்டு எழுத்துத் தேர்வுகளை கடந்த 10.04.2022 அன்று சென்னையிலும் , நாகர்கோவிலிலும் நடத்தியுள்ளது .

அது ” சி ” பிரிவு , ” பி ” பிரிவு பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஆகும் . அவை அனைத்துமே சாதாரண நிலையில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கான தேர்வு . எழுத்துத் தேர்வில்தான் அதிர்ச்சி காத்திருந்தது . லகுரக வாகன ஓட்டுநர் , சமையலர் பதவிகளுக்கான தேர்வு கேள்வித் தாள்களில் மட்டுமே தமிழ் வடிவமும் இடம் பெற்றிருந்தது . மற்ற பதவிகளுக்கான தேர்வு கேள்வித் தாள்கள் இந்தி / ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன . பொருத்துபவர் ( Fitter ) , பற்ற வைப்பவர் ( Welder ) போன்ற பதவிகளும் அதில் அடக்கம் .

பெரும்பாலான தேர்வர்கள் ஐ.டி.ஐ பட்டயப் படிப்பு முடித்தவர்களே . தமிழ் வழிக் கல்வியில் வந்தவர்கள் . ஒடுக்கப்பட்ட , பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சார்ந்தவர்கள் .

எழுத்துத் தேர்வில் தமிழ் புறக்கணிப்பு என்பது தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அப்பட்டமான பாரபட்சம் … அநீதி . இது அவர்களுக்கு சமதள போட்டிச் சூழலையும் மறுப்பது ஆகும் . இது சரி செய்யப்பட வேண்டும் .

எனவே தமிழ் வடிவக் கேள்வித்தாளுடன் மறு தேர்வை நடத்த வேண்டுமென அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளேன் .”

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.