Tue. Sep 27th, 2022

15 வது ஐபிஎல் சீசன் 30 வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ்:
தொடக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் தனது அதிரடியால் ராஜஸ்தான் அணியை மிகப்பெரிய ஸ்கோர் நோக்கி அழைத்து சென்றார். மேலும் சஞ்சு சாம்சன் தனது பங்குக்கு அதிரடியாக விளையாடினார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 103 (61) ரன்னும், சஞ்சு சாம்சன் 38 (19) ரன்னும் அடித்தனர். கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஆரோன் பின்ச் 58 (28) மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் 85 (51) தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாஹல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Hits: 6

Leave a Reply

Your email address will not be published.