Fri. Apr 19th, 2024

சு.வெங்கடேசன் எம்.பி பி.எஸ்.என்.எல் காண்ட்ராக்ட் ஊழியர் சம்பளப் பாக்கி குறித்து எழுதிய கடிதத்திற்கு தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் பதில் அளித்துள்ளார் .

“சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் போட்டது 02.11.2021 அன்று …

பதில் வருவது 11.04.2022 அன்று …

செப்டம்பர் 2021 வரை பல இடங்களில் ஊதிய பாக்கி தரப்பட்டு விட்டது என்று பதில் …

எல்லா இடங்களிலும் தரப்பட்டு விட்டதா என்ற தகவலும் அதில் இல்லை …

பி.எஸ்.என். எல் ரூ 32 கோடி மண்டல தொழிலாளர் ஆணையர் வாயிலாக தந்தது சென்னை உயர் நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் … இன்னொரு ரூ 40.94 கோடி தந்திருப்பதாக சொல்லி இருக்கிறார் .

ஏப்ரல் 2022 இல் இவர்கள் பதில் தருவதற்குள் இன்னும் 6 மாத கால ஊதிய பாக்கி ஆகி விட்டது .

அரசு நிறுவனமே இப்படி தொழிலாளர்களை பட்டினி போட்டால் தனியார் நிறுவனங்கள் என்ன ஆட்டம் போடும் ! பொதுத் துறை நிறுவனங்கள் ” மாதிரி பணியமர்த்துபவர் ” என்ற கோட்பாடு உலகமய காலத்தில் காற்றில் பறக்கிறது . இன்று ” தனியார் மாதிரி ” தொழிலாளர் உரிமைகளை , பயன்களை பந்தாட ஆரம்பித்து விட்டார்கள் .

அவர்கள் உழைப்புக்கான ஊதியத்தையே கேட்கிறார்கள் . ஆறு மாத கால பாக்கி என்றால் எப்படி வாழ்க்கை நடத்துவது !

ஒன்றிய அரசே , பி.எஸ்.என்.எல் நிர்வாகமே உடனடியாக ஊதிய பாக்கிகளை வழங்கிடு ! ஊதியம் வழங்கலை முறைப்படுத்து !” என்று தெரிவித்துள்ளார்.

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *