Sat. Sep 24th, 2022

தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை “மேதகு தமிழக ஆளுநர் திரு . ஆர்.என் . ரவி அவர்கள் இன்று ( 19.4.2022 ) மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனம் அவர்களை சந்தித்துவிட்டு திரும்பி வரும் வழியில் , மன்னம்பந்தல் என்ற இடத்தில் ஒரு சில சமூக விரோதிகள் கற்களையும் , கருப்புக் கொடி கம்பங்களையும் கொண்டு அவர் சென்ற வாகனங்களின் மீது கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர் .

தமிழகத்திலேயே , மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் மீது கற்களையும் , கம்புகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியதும் , தமிழகத்திற்குள்ளேயே தமிழக ஆளுநர் பயணிக்க முடியவில்லை என்பதும் , தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்கேடு அடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது . தமிழக ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனில் , சாதாரண மக்களுக்கு இந்த விடியா அரசு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது .

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும் , சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் ஏற்காது என்பதோடு , கழகத்தின் சார்பில் இந்தத் தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

தமிழக ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு , காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் முதலமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார் ? “

Hits: 14

Leave a Reply

Your email address will not be published.