Sat. Apr 20th, 2024

15 வது ஐபிஎல் சீசன் 27 வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர்:
தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் டுப்ளிஸ், ராவத் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். கோஹ்லியும் 12 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி கடைசிவரை களத்தில் நின்று அணிக்கு நல்ல ஸ்கோர் எடுக்க உதவினார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. பெங்களுர் அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 55 (34) ரன்னும், தினேஷ் கார்த்திக் 66 (34) ரன்னும் எடுத்தனர்.

டெல்லி கேபிடல்ஸ்:
190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் டேவிட் வார்னர் 66 (38) ரன்னும், ரிசப் பான்ட் 34 (17) ரன்னும் எடுத்தனர் இவர்களை தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். 20 ஓவர் முடிவில் டெல்லி அணியால் 7 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *