Thu. Apr 18th, 2024

15 வது ஐபிஎல் சீசன் 26 வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்:
தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ராகுல் அதிரடியாக விளையாடி கடைசிவரை களத்தில் நின்று அணிக்கு நல்ல ஸ்கோர் எடுக்க உதவினார். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக ராகுல் 103 (60) ரன்னும், மனீஷ் பாண்டே 38 (29) ரன்னும் எடுத்தனர். மும்பை அணி சார்பில் உனட்கட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மும்பை இந்தியன்ஸ்:
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் 37 (27) ரன்னும், டிவால்ட் ப்ரேவிஸ் 31 (13) ரன்னும் எடுத்தனர் இவர்களை தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். 20 ஓவர் முடிவில் மும்பை அணியால் 9 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Visits: 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *