Thu. Mar 28th, 2024

15 வது ஐபிஎல் சீசன் 25 வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
தொடக்க வீரர்கள் சொதப்ப மிடில் ஆர்டரில் வந்த நிதிஷ் ராணா 54(36) ரன்களும், ரஸல் 49 (25) ரன்களும் அடித்து அணியை நல்ல ஸ்கோர் பெற செய்தனர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியில் நடராஜன் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சன் ரைசர்ஸ் ஐதராபாத்:
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தொடக்க வீரர்கள் மிக விரைவாக அவுட் ஆகினர். பின்னர் வந்த ராகுல் திரிபாதி 71(37) ரன்களும், ஐடென் மார்க்ரம் 68 (36) இவர்களின் அதிரடியால் அணியின் ஸ்கோர் மிக விரைவாக உயர்ந்தது. 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *