Sat. Apr 20th, 2024

மதுரையில் இன்று ( 16-4-2022 ) காலை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிய நிகழ்வைக் காணும் பொருட்டு , தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர் . கோவிட் பாதிப்பால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் , இந்த வைபவம் நடப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்ட நிலையில் , இன்று காலை அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பங்குபெற்று திரும்பும் வேளையில் கூட்டநெரிசலில் சிக்கி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர் . மேலும் ஒருவர் பலத்த காயங்களுடனும் , 7 பேர் சாதாரண காயங்களுடனும் மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இந்தத் துயர சம்பவத்தை அறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்கள் , மிகவும் வேதனையுற்று , உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு , இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும் தலா ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணமும் , படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும் சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள் .

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *