Tue. Sep 27th, 2022

15 வது ஐபிஎல் சீசன் 24 வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

குஜராத் டைட்டன்ஸ்:
தொடக்க ஆட்ட வீரர்கள் சொதப்ப மிடில் ஆர்டரில் வந்த கேப்டன் ஹர்டிக் பாண்டியா 87 (52) ரன்களும், அபினவ் மனோகர் 43 (28) ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் :
193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லரை 54 (24) தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

குஜராத் டைட்டன்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

Hits: 8

Leave a Reply

Your email address will not be published.