Thu. Oct 6th, 2022

ஸ்வாதிகா@swathikasarah அவர்களின் டிவிட்டர் பதிவு:

டாணாக்காரன் படம் அற்புதமாக இருந்தது வித்தியாசமான கதைக்களம். ஆனால் நான் சொல்ல போவது விமர்சனம் அல்ல. அந்த படத்தில் இருந்து சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ளலாம்.

முதல்ல படத்துல system system என்று சொல்கிறார்கள் இல்லையா? அந்த system என்றால் என்ன?

மனிதனுடைய இயல்பே குழுவாக இயங்குவதுதான். பல மிருகங்கள் குழுவாக தான் இருக்கும் உதாரணமாக யானை. ஒரு குழுவாக இயங்கும் போது மனிதனுக்கு உயிர் வாழ்தலுக்கு பல ஆதாயங்கள் கிடைக்கின்றன. இன குழு, மத குழு இப்படி பல குழுக்கள் உண்டு.

ஒரு 10 பேர் ஒரு இடத்தில் இருந்தால் அதில் 2 குழுக்கள் கட்டாயம் இருக்கும்.

குழு உருவாக்குதல் மனித இயல்பு இப்படி குழு உருவானதும் அந்த குழு மூலம் ஆதாயம் அடைய நினைக்கும் சிலர், அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு அவர்கள் வசதிக்கேற்றவாறு சட்டதிட்டங்களை உருவாக்குவார்கள் அதுதான் system.

இந்த system குழுவின் நன்மைக்கு என்று சொன்னாலும் பெரிய நன்மை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தான் கிடைக்கும். நீங்கள் எந்த வகையான குழுவை எடுத்துக்கொண்டாலும் இதுதான் நிதர்சனம்.

ஒரு தலைவர் அவருக்கு கீழ் சிலர், அவர்கள் தான் அதிகார மையம் இவர்கள் தான் system.

அவர்கள் வரையறுப்பது தான் சட்டம். அவர்களை எதிர்த்து கேள்வி கேட்கும் குழு உறுப்பினர்கள் குழுவில் இருந்து விலக்கப்படுவார்கள். outcast. ஒரு குழுவில் இருந்து வெளியில் வந்தவர்களால் இன்னொரு குழுவில் இணைய முடியாது. எந்த குழுவிலும் இணையாமல் தனி நபரால் survive பண்ண முடியாது.

இயல்பாக உருவாகும் குழு அதற்கு குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு தலைவர் என்பதற்கு உதாரணம் இன குழு, வாழுமிடம் சேர்ந்து உருவாகும் குழுக்கள் அபார்ட்மெண்ட் association போன்றவை.

ஒரு தனி நபர் தனது தேவைக்கேற்ப ஒரு குழுவை உருவாக்கி அதற்கு தலைவராகுதல் உதாரணமாக cult , தனியார் நிறுவனங்கள் போன்றவை. இந்த இரண்டிலும் அதிகார சுரண்டல் உண்டு.

சரி குழு என்றால் என்னவென்று பார்த்தாச்சு. இப்போ இந்த குழுவை எப்படி கட்டுப்படுத்துவது?

1.படம் ஆரம்பத்தில் எப்படி பிரிட்டிஷ் இந்தியாவில் போலீஸ் முறையை உருவாக்கினார்கள்? ஏன் கடுமையான பயிற்சிகள் முக்கியமாக தேவையே இல்லாத parade கொண்டு வந்தார்கள் என்று விவரித்து இருப்பார்கள். இந்த parade ஒரு group activity எல்லா குழுவிலும் இது போல தேவையே இல்லாத ஒரு விஷயம் இருக்கும்.

மதங்களில் தோப்புக்கரணம் போடுதல், சர்ச்சில் எழுந்து நில்லுங்க, முட்டி போடுங்க, உக்காருங்க, கைகளை உயர்த்துங்க, அப்புறம் தொழுகை. இம்மாதிரியாக ஒரு குழுவில் உங்களை தீவிரமாக ஐக்கிய படுத்த வேண்டுமானால் இந்த மாதிரி group activity/physical activity பண்ண சொல்வார்கள்.

இது மூளைச்சலவை யின் முதல்படி. நமது மூளை இந்த physical activity லேயே கவனம் செலுத்தும். நவகிரகத்தை எத்தனை முறை சுத்தினேன், தொழுகையில் எத்தனை முறை குனிந்து எழுந்தேன், left right left right about turn என்று அதிலே கவனம் செல்வதால் வேறு எதையும் யோசிக்காது.

இப்படி monotonous ஆ ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப செய்து கொண்டு இருக்கும் போது மூளை மழுங்கிவிடும். முக்கியமாக அந்த குழுவில் இருக்கும் வரை தான் இந்த செயல்களுக்கு எல்லாம் அர்த்தம். அந்த குழுவில் இருந்து வெளியில் வந்து விட்டால் தோப்புக்கரணம் போடுவது, உட்கார்ந்து குனிந்து எழுந்து பிரார்த்தனை செய்வது, left right left right about turn எல்லாமே அபத்தமாக தோன்றும் இத்தனை நாள் இதெல்லாம் லூசு மாதிரி பண்ணி கொண்டு இருந்தோமே பைத்தியமா நானு? என்று நம்மை நாமே கேள்வி கேட்போம் and முன்ன சொன்ன மாதிரி மூளை சரோஜா தேவியா மாறி “இல்லை… இல்லை…” என்று நம்மை மீண்டும் அந்த குழுவில் இணைத்துவிடும். குழுவில் இருக்கும் ஒரு நபர் குழுவை தாண்டி வேறு எதையும் சிந்திக்க கூடாது என்பதற்காகவும், குழுவை விட்டு செல்ல கூடாது என்பதற்காகவும் இம்மாதிரியான parade களுக்கு அதீத முக்கியத்துவத்தை எல்லா system உம் குடுக்கும்.

2. கட்டளைகளை பின்பற்ற வேண்டும். ஒரு குழுவாக இயங்கும்போது எல்லாரும் ஒன்று போல செயல்பட்டால் தான் ஒரு விஷயத்தை அடைய முடியும் அதற்காக கட்டளைகளுக்கு எதிர் கேள்வி கேட்காமல் கீழ்ப்படிய வேண்டும் என்பார்கள். இது எல்லா குழுவிலும் அடிப்படை. அதற்காக “us and them” என்று பிரிப்பார்கள்.

நமது குழு எதிர் குழு. இதில் நமது குழு செய்வது அனைத்தும் சரி எதிர் குழு செய்வது அனைத்தும் தவறு. எதிர் குழு நம்மை அழிக்கவே இருக்கிறது. அவர்கள் நம்மை அழிக்கும் முன் நாம் எதிர் குழுவை எப்படியேனும் அழிக்க வேண்டும்.

இப்படி ஒரு எதிர் குழுவை முன்னிறுத்தும் போது நமது குழு மேலும் ஒற்றுமையாக வலுவாக மாறுகிறது. நமக்கு ஒரு ஆபத்து எதிரி இருக்கிறான். அவனை அழிக்க நாம் எல்லாரும் ஒன்று பட்டு செயலாற்ற வேண்டும். அதற்கு கேள்வி கேட்காமல் கட்டுப்பட வேண்டும் .

3. மிக முக்கியமான ஒன்று, ஒரு கூட்டத்தை நாம் அடக்கி வைக்கும்போது அதில் ஒருவன் எதிர்த்து நின்றால் அவனை மட்டும் தண்டிக்க கூடாது. அந்த கூட்டத்தையே அவனுடைய தவறுக்காக தண்டிக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த முறை அவன் யாருக்காக குரல் குடுக்க நினைக்கிறானோ அவர்களே இவனை அடக்கி விடுவார்கள்.

அல்லது அவனுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிவிடுவார்கள். கூட்டத்தில் எவராவது அதிகாரத்திற்கு எதிராக திட்டம் தீட்டும் போது, கூட்டத்தில் தண்டனைக்கு பயந்த மற்றவர்கள் அதிகாரத்திடம் இந்த சதியாலோசனை பற்றி தகவல் கொடுப்பார்கள்.

4. கமாண்டர் கடைசியில் மதியிடம் என் பையன் ஈஸ்வரமூர்த்தியுடன் போட்டியிட்டாலும் நான் ஈஸ்வரமூர்த்திக்கு தான் வெற்றியை குடுப்பேன் ஏன் என்றால் ஈஸ்வரமூர்த்தி system ஓட ஒரு அங்கம் என்பார்.

ஏனென்றால் தனிப்பட்ட சாதனைகள் மூலம் வரும் பலன்களை காட்டிலும் இந்த system மூலம் அதிகார வர்க்கம் பெரும் பலன்கள் அதிகம். எனவே எந்தவொரு தனி மனிதருக்காகவும் அது அதிகாரத்தில் இருக்கும் நபராகவே இருந்தாலும் அவர்களுக்காக system உடைவதை விரும்பமாட்டார்கள்.

ஆணாதிக்கம் என்பது ஒரு system அதில் அதிகார வர்க்கத்தில் இருப்பது ஆண்கள் பயனடைவது ஆண்கள். சனாதன தர்மம் என்பது ஒரு system அதில் அதிகார வர்க்கத்தில் இருப்பது பிராமணர்கள். மதம் என்பது ஒரு system அதில் அதிகார வர்க்கத்தில் இருப்பது சாமியார்கள்.

டாணாக்காரன் படத்தில் வருவது போல, அந்த system உருவாக்கியது ஆங்கிலேயர்கள். ஈஸ்வரமூர்த்தியோ, முத்துபாண்டியோ அல்ல ஆனால் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய system ஐ தொடர்ந்து பாதுகாத்து அதன் மூலம் பயனடைபவர்களாக ஈஸ்வரமூர்த்தி முத்துப்பாண்டி இருக்கிறார்கள்.

அது போல Patriarchy, மதம், சனாதன தர்மம் போன்ற அமைப்பை உருவாக்கியவர்கள் தற்போது இருக்கும் ஆட்கள் அல்ல. ஆனாலும் அதை தொடர்ந்து பாதுகாத்து அதன் மூலம் பயனடைபவர்களாக இந்த ஆணாதிக்கவாதிகள், மதவாதிகள், சாதிவெறியர்கள் இருக்கிறார்கள்.

இந்த அரசியலை எல்லாம் புரிந்து கொள்ள படிக்க வேண்டும். எதை படிக்க கூடாது என்கிறார்களோ அதை படிக்க வேண்டும்.

Hits: 114

Leave a Reply

Your email address will not be published.