Sat. Sep 24th, 2022

15வது ஐபிஎல் சீசன் 22வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி தொடக்க வீரராக களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் 17 ரன்களில் அவுட் ஆக அவர் பின் வந்த மொய்ன் அலி 3 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதற்குப்பின் இணைந்த உத்தப்பாவும்,ஷிவம் துபேவும் பெங்களூர் அணி பந்துவீச்சை சிதறடித்தனர். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 216 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஷிவம் துபே 95 (46), உத்தப்பா 88 (50) எடுத்திருந்தனர்.

217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரர்கள் சொதப்ப மிடில் ஆர்டரில் வந்த ஷாபஷ் அகமத் 41 (27) ரன்களும், தினேஷ் கார்த்திக் 34 (14) ரன்களும் எடுத்து அணியை நல்ல ஸ்கோர்க்கு அழைத்து சென்றனர். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வெற்றியை பெற்றது.

Hits: 4

Leave a Reply

Your email address will not be published.