Thu. Oct 6th, 2022

சில தினங்களுக்கு முன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு தமிழகத்தில் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியது.

அமித் ஷா கருத்து தெரிவித்திருந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இணையதளத்தில் தமிழணங்கு என ஒரு போஸ்டர் வெளியிட்டுயிருந்தார். போஸ்டர் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் வாட்சப்,டிவிட்டர்,இன்ஸ்டாகிராம்,பேஸ்புக் போன்ற தளங்களில் வெளியிட்டு தமிழர்கள் கொண்டாடினர்.

இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் அவர்களும் தனது டிவிட்டர் பக்கத்தில் “தமிழால் இணைவோம்” என பதிவிட்டு உள்ளார்.

Hits: 12

Leave a Reply

Your email address will not be published.