Sat. Sep 24th, 2022

சிபிஐஎம் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் ஒன்றிய வெளியுறவு அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம் “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி , வேலையிழப்பு , உச்சத்தை தொட்டுள்ள பணவீக்கம் காரணமாக தமிழ் மக்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் வந்து இறங்கி வருகிறார்கள் . தினமும் இந்த எண்ணிக்கை அதிகரிப்பதாக செய்திகள் வருகின்றன . இலங்கையில் உள்ள தமிழ் மக்களும் சொல்லொண்ணா துயரில் ஆழ்ந்துள்ளனர் .

இந்த சூழலில் மனிதாபிமான அடிப்படையில் ஒன்றிய அரசு இரண்டு விசயங்களை செய்ய வேண்டும் .

ஒன்று , தமிழ்நாடு முதல்வர் , அத்தியாவசிய பொருட்களை அங்குள்ள தமிழ் மக்களுக்கு இந்திய தூதரகம் மூலம் வழங்க ஒன்றிய அரசின் அனுமதியை நாடி வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் . ஒன்றிய அரசு தாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும் .

Hits: 1

Leave a Reply

Your email address will not be published.