சாதி ஒழிப்புப் புரட்சியாளர் மகாத்மா ஜோதிராவ் புலே அவர்களின் பிறந்தநாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி மிகப் பெரும் சாதி ஒழிப்புப் புரட்சியாளர்களில் ஒருவரான மகாத்மா ஜோதிராவ் புலே அவர்களின் பிறந்தநாளில் எனது வணக்கத்தை உரித்தாக்குகிறேன் . ஒடுக்கப்பட்டோர் , பெண்களுக்குக் கல்வியறிவு கிடைக்கச் செய்ததில் மட்டுமல்லாது சீர்திருத்தத் திருமணங்களை நடத்துவதிலும் ஜோதிராவ் புலே ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் ஆவார் . அவர் கண்ட கனவை நனவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் !
Hits: 4