Tue. Sep 27th, 2022

புதிய தலைமுறை செய்தியாளர் திரு,நிரஞ்சன்குமார் அவர்களின் டிவிட்டர் பக்கத்திலிருந்து “தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்களுடைய நாடாளுமன்ற முதல் பேச்சின் ஒரு பகுதியை கீழே கொடுத்துள்ளேன்

அண்ணாவின் பேச்சு:

மக்கள் ஒன்றுபட்டபின் ஒருமைப்பாட்டுக்கு என்ன வேலை?

நாங்கள் தென்னகத்திலிருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறோம். ஆனால் இங்கு ஆங்கிலத்தை அறிந்தபோதும் உறுப்பினர்கள் ஹிந்தியில் பேசுவதையும், கேள்வி கேட்பையும் பதில் பெறுவதையும் பார்க்கிறோம்

அப்படி பேசும்போது அவர்கள் கண்கள் மின்னுவதைப் பார்க்கிறேன்.அதன் பொருள் என்ன?

நீங்கள் ஹிந்தியை கற்று கொள்ளுங்கள்.இல்லையேல் இங்கு பேசாமல் இருங்கள் என்பதுதானே?

இதுதான் தேசிய ஒருமைப்பாட்டுக்கான வழியா?

தேசிய ஒருமைப்பாடு என்று சொல்லுவது முன்னுக்குப்பின் முரணான வாசகம் என்றுதான் கூறுகிறேன்.

ஒருமைப்பாடு பெற்ற மக்கள் சமுதாயம்தான் நாடு ஆகிறது. அப்படி ஒரு நாடு உருவாகி இருந்தால் இப்போது ஒருமைப்பாட்டை வலியுறுத்த என்ன அவசியம் வந்தது?

நான் ஒரு திராவிடன். என்னை திராவிடன் என அழைத்துக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ எதிரானவன் அல்ல.

ராபர்ட் பர்ன்ஸ் குறிப்பிட்டது போல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன் தான்.”

Hits: 13

Leave a Reply

Your email address will not be published.