Tue. Sep 27th, 2022

நடிகர் விஜய் நடிப்பில் டைரக்டர் நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வந்த படம் “பீஸ்ட்”. சிலதினங்களுக்கு முன் படத்தின் டிரெய்லர் படக்குழுவால் வெளியிடப்பட்டது. படத்தின் கதை தீவிரவாதிகளால் மாலுக்குள் மாட்டிக்கொண்டிருக்கும் பிணைக்கைதிகளை மீட்பது போல கட்டப்பட்டிருந்தது. அதிகமான வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறி குவைத் அரசு படத்திற்கு தடை போட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி கோரிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது மக்களுக்கு இஸ்லாமிய இயக்கங்கள் மக்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கும்போது தீவிரவாதிகளாக காட்சிப்படுத்துவது வேதனைக்குரியது. எனவே படத்தை வெளியிட தடை செய்யவேண்டுமென உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அவர்களை முஸ்லீம் லீக் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Hits: 45

Leave a Reply

Your email address will not be published.