Thu. Apr 18th, 2024

15 வது ஐபிஎல் சீசன் 11 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பஞ்சாப் கிங்ஸ் :

தொடக்க வீரராக களமிறங்கிய தவான் 33 (24) அடிக்க அவர் பின் வந்த லிவிங்ஸ்டோன் 60 (32) அதிரடியால் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் :

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிவம் துபே 57(30) தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது.

பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *