Thu. Oct 6th, 2022

15 வது ஐபிஎல் சீசன் 8 வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பஞ்சாப் கிங்ஸ் :
தொடக்க வீரராக களமிறங்கிய மயங் அகர்வால், தவான் மிக விரைவாக தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன் பின் வந்த வீரர்களில் ராஜபக்ச 31(9) தவிர அனைவரும் கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. கொல்கத்தா அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :
138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் ரசெல் 70(31) அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற செய்தார்.
14.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 141 எடுத்து வெற்றியை பெற்றது.

இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.

Hits: 0

Leave a Reply

Your email address will not be published.