Fri. Mar 29th, 2024

15 வது சீசன் ஐபிஎல் தொடரின் 5 வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் புனேவில் மோதின. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் :

அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் 35(28) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் பின் விளையாட வந்த வீரர்கள் ஜெய்ஸ்வால் 20 (16) ரன்களும், சாம்சன் 55(27) ரன்களும், படிக்கல் 41(29) ரன்களும், ஹெட்மயேர் 32(13) ரன்கள் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்தது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் சார்பில் புவனேஸ்வர் 2 விக்கெட்டும், நடராஜன் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் :

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அணிக்கு தொடக்க வீரர் கேன் வில்லியம்சன் 2 எடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். மார்க்ரம் 57(41) ரன்களும் , வாஷிங்டன் சுந்தர் 40(14) ரன்களும் எடுத்தனர். முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ரன்கள் விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *