Thu. Oct 6th, 2022

15 வது சீசன் ஐபிஎல் தொடரின் 4 வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் :

அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஷமி பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். அவர் பின் வந்த வீரர்கள் டி காக், லெவிஸ், மனிஷ் பாண்டே சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். மிடில் ஆர்டரில் விளையாட வந்த தீபக் ஹூடா 55 ரன்களும், ஆயுஷ் படோனி 54 ரன்களும், க்ருனால் பாண்டியா 21 ரன்கள் எடுத்து அணியை மீட்டனர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

குஜராத் டைட்டன்ஸ் :

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அணிக்கு தொடக்க வீரர் கில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். மத்தேயு வடே 30 ரன்களில் அவுட் ஆக அவர் பின் வந்த வீரர்கள் தங்கள் பங்குக்கு ஹர்டிக் பாண்டியா 33 ரன்களும் , டேவிட் மில்லர் 30 ரன்களும் எடுத்தனர். இறுதி கட்டத்தில் ராகுல் தேவத்தியா அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். ராகுல் தேவத்தியா 40(24) ரன்களுடனும், அபினவ் மனோகர் 15 (7) ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

Hits: 16

Leave a Reply

Your email address will not be published.