Thu. Apr 25th, 2024

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோஹித் 41(32) , இஷான் கிஷான் 81(48) அணிக்கு நல்ல அதிரடி தொடக்கத்தை ஏற்படுத்தினார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது. டெல்லி கேபிடல்ஸ் சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள் சிறப்பாக விளையாடி 18.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் பிரித்தி ஷா 38(24) ரன்களும் , லலித் யாதவ் 48(38), அக்சர் படேல் 38(17) ரன்களும் எடுத்தனர். மும்பை இந்தியன்ஸ் சார்பில் பாசில் தம்பி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *