Sat. Sep 24th, 2022

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கி கர்நாடக அரசு பணிகளைத் தொடங்கிவிட்ட பிறகு, மிகத் தாமதமாக தூக்கம் கலைந்து விழித்துள்ள தி.மு.க.அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

ஆனால், கடிதம் எழுதுவது, தீர்மானம் நிறைவேற்றுவது என்கிற கருணாநிதி காலத்து நடைமுறைகளை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழகத்தின் நலனை தி.மு.க.வின் வழக்கப்படி இம்முறையும் விட்டுக் கொடுத்துவிடக்கூடாது.

நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி.க்களை வைத்திருக்கிறதோடு தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தையும் வைத்துள்ள முதலமைச்சர் திரு.ஸ்டாலின், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகேதாட்டு அணையைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.”

Hits: 18

Leave a Reply

Your email address will not be published.