Fri. Mar 29th, 2024

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “அதிமுக ஆட்சி காலம் தான் விவசாயிகளின் பொற்காலம் , குடிமராமத்து திட்டம் , அணைகள் தூர்வாரும் பணிகள் , டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக அரசு .

வேளாண் பட்ஜெட் எந்த ஒரு பெரிய திட்டமும் இல்லாமல் கண்துடைப்பாக , காற்று அடைத்த பலூனாக உள்ளது.

பால்வளம் , உணவு , கூட்டுறவு இவை அனைத்தும் தனித்தனி துறைகளாக உள்ளது . தனி அமைச்சர்கள் உள்ளனர் . இவற்றை எல்லாம் ஒருங்கினைத்து வேளாண் பட்ஜெட் எனும் மாயை உருவாக்கி உள்ளனர்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் மூட்டைகளை , கொள்முதல் செய்து மாநில நிதியிலிருந்தே தொகை வழங்கப்பட்டது.ஆனால் திமுக ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிக்கபடுகின்றனர் .

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தியது . விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் அளிக்கப்பட்டதும் அதிமுக ஆட்சியில் தான் . தென்மேற்கு பருவ மழையின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் அளிக்கவில்லை.

ஒரு லட்சம் மூட்டைக்கு மேலாக கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் முளைத்து அரசுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது . இதன் மூலம் நிர்வாக திறமை இல்லாத அரசு என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது .

விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற ரூ .12,110 கோடி கடனை தள்ளுபடி செய்தது அதிமுக அரசு . இந்த அரசு 48 லட்சம் பேரில் 13 லட்சம் பேரை மட்டுமே தேர்வு செய்து நகை கடன் தள்ளுபடி செய்துள்ளது .

தமிழ்நாடு மாடல் எனும் நிலையில் அதிமுக அரசு நிர்வாக திறமையின் காரணமாக மத்திய அரசின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளோம் . வந்த 9 மாதத்தில் திராவிட மாடலில் என்ன செய்தார்கள் ?

திருமண உதவி திட்டம் கொண்டு வந்து ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு திருமணத்துக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது . வேண்டுமென்றே அம்மா கொண்டு வந்த திட்டம் என்பதற்காக திட்டத்தை நிறுத்தி உள்ளனர் . அம்மா இருசக்கர வாகனம் திட்டத்தையும் இந்த அரசு நிறுத்தி உள்ளது .

2021 தேர்தல் அறிக்கையில் 5 சவரனுக்கு குறைவாக கூட்டுறவு சங்கங்களில் வைத்த நகை கடன் தள்ளுபடி என அறிவித்து விட்டு , இன்று பல்வேறு விதிமுறைகளை அறிவித்து வருகின்றனர் .”

Visits: 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *