Thu. Oct 6th, 2022

திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவர் , திமுக மகளிரணிச் செயலாளர்கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை “தெற்கு ரயில்வேக்கு ரூ .59 கோடி மட்டும் , வடக்கு ரயில்வேக்கு ரூ .13,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

One Nation என்று எப்போதும் பேசும் நீங்கள் ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் வடக்கு , தெற்கு பாகுபாடு பார்க்கக்கூடாது !

தென்னிந்திய ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட வடக்கு ரெயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது .

கடந்த 4 ஆண்டுகளில் தென்னிந்திய ரெயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த தொகை வெறும் ரூ .308 கோடி மட்டுமே !

ரயில்வே துறையில் தென்னிந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்படுகின்றன . மொழி தெரியாத பணியாளர்களால் மக்களின் உயிருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது !

நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் .

லாபத்தில் இயங்கும் ரயில்களை , ஒன்றிய அரசு தனியாருக்குத் தாரைவார்க்கிறது . நஷ்டத்தில் இயங்கும் ரயில்களை மட்டுமே ஒன்றிய அரசு இயக்குகிறது ! “

Hits: 13

Leave a Reply

Your email address will not be published.