Thu. Oct 6th, 2022

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐ(எம்) சு.வெங்கடேசன் அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பு “டெல்லி பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து 21.12.2021 அன்று ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தேன் .

அதற்கு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் முனைவர் சுபாஷ் சர்க்கார் 11.03.2022 தேதியிட்ட கடிதம் ( D.O No 62 -6 / 2019 – CU II ) வாயிலாக பதில் அளித்துள்ளார் .

டெல்லி பல்கலைக் கழகம் நாடாளுமன்ற தனிச் சட்டம் மூலம் உருவாக்கப்பட்டது ; டெல்லி பல்கலைக் கழக சட்டம் 1922 மற்றும் அதன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட / அவசர சட்ட நியதிகளுக்கு உட்பட்டு செயல்படும் அமைப்பு ; அதன் முடிவுகள் அதன் செயற்குழு / கல்விக் குழு / மன்றம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார் .

எனது கடிதம் டெல்லி பல்கலைக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாகவும் , அதன் இந்திய நவீன மொழிகள் மற்றும் இலக்கிய கல்வித் துறையில் ( Department of MIL & LS ) தமிழ் சார் காலியிடங்கள் கீழ்க் கண்ட எண்ணிக்கையில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார் .

உதவிப் பேராசிரியர் – தமிழ் – 1 ( பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினர் EWS ) , இணைப் பேராசிரியர் – தமிழ் 1 ( பட்டியல் சாதி – SC ) 1 ( பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினர் – EWS ) , 1 ( இதர பிற்பட்ட பிரிவினர் – OBC ) ஆகிய காலியிடங்கள் உள்ளன . மேலும் தயாள் சிங் கல்லூரியில் ஒரு காலியிடம் உள்ளது ; இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளை டெல்லி பல்கலைக் கழகம் தற்போது மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார் .

அமைச்சருக்கு நன்றி . தலைநகரில் தமிழ்க் கல்வி தடையின்றி கிடைக்கட்டும் .

டெல்லி பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக்கு உரிய இடம் இருக்க வேண்டும் , தொடர வேண்டும் என்ற எனது முயற்சிக்கு கிட்டியுள்ள நல்ல பதில் . முன்னேற்றம் . வெற்றி .”

Hits: 14

Leave a Reply

Your email address will not be published.