Thu. Apr 25th, 2024

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. கர்நாடகாவில் உள்ள பெங்களுரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு பகலாக டெஸ்ட் நடைபெறுகிறது.

இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் 97 தவிர அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். 10 விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் மட்டுமே முதல் இன்னிங்சில் எடுக்க முடிந்தது. தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 109 ரன்களுக்குள் பும்ராவின் பந்துவீச்சில் ஆல் அவுட் ஆகினர்.

143 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 9 விக்கெட்டு இழந்த நிலையில் 303 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை வீரர்கள் பும்ரா மற்றும் அஸ்வின் பந்துவீச்சில் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக திமுத் மட்டும் 107 ரன்கள் எடுத்தார். முடிவில் இலங்கை அணி 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது டெஸ்டிலும் வெற்றியை பதிவு செய்தது.

இதன்மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது.

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *