Sat. Sep 24th, 2022

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அனைத்து மாநில கூட்டுறவு வங்கிகளின் மூலம் மாற்றப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு குறித்தும் , அந்தக் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிதாக தொடங்கப்பட்டு மற்றும் மூடப்பட்ட வங்கி கணக்குகளின் விவரங்கள் உள்ளனவா என ஒன்றிய நிதி அமைச்சகத்திடம் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார் .

அதன் விவரங்கள் பின்வருமாறு : பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ஒன்றிய அரசு அறிவித்த பின்பு , 8 நவம்பர் 2016 முதல் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை ஜன் தன் கணக்குகளில் டெபாஸிட் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் , ரிசர்வ் வங்கி அல்லது NITI ஆயோக் மூலம் ஏதேனும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்ற விவரத்தை தெரியப்படுத்தவும் என கேள்வி எழுப்பினார் . .

2016 மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே துவங்கப்பட்ட புதிய வங்கி கணக்குகள் மற்று 2016 மார்ச் முதல் 2021 நவம்பர் மாதங்களுக்கு இடையே துவங்கப்பட்ட புதிய வங்கி கணக்குகள் குறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் , ரிசர்வ் வங்கி அல்லது NITI ஆயோக் மூலம் ஏதேனும் ஆய்வுகள் அல்லது தடயவியல் தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்ற விவரத்தை தெரியப்படுத்தவும் என கேள்வி எழுப்பினார் .

மேற்குறிப்பிட்டுள்ள கால இடைவெளியில் வங்கியில் இருந்து பணத்தை திரும்ப பெற்ற கணக்குகள் எத்தனை மற்றும் வங்கியில் நிரந்தரமாக மூடப்பட்ட கணக்குகள் எத்தனை என்ற விவரத்தை தெரியப்படுத்தவும் என கேள்வி எழுப்பினார் . . பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட கால இடைவெளியில் , பல்வேறு மாநிலங்களின் கூட்டுறவு வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றதன் மதிப்பு எவ்வளவு என NITI ஆயோக் அல்லது ரிசர்வ் வங்கியிடம் தரவுகள் உள்ளனவா , அவ்வாறெனில் அந்த விவரங்களை தெரியப்படுத்தவும் என கேள்வி எழுப்பினார் .

Hits: 4

Leave a Reply

Your email address will not be published.