Sat. Sep 24th, 2022

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஏழு தமிழர் விடுதலையில் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியிருப்பது நிம்மதியளிக்கிறது. இதைத்தொடர்ந்து எஞ்சிய ஆறுபேரும் பிணையில் விடுதலை ஆகிவிடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

பல ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழு தமிழரையும், இஸ்லாமிய சிறைக்கைதிகளையும் ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலை செய்துவிடுவோம்’ என்று கூறி மக்களை ஏமாற்றிய தி.மு.க., அவர்கள் இனி எப்போதுமே சிறையிலிருந்து விடுதலையாக முடியாதபடி அரசாணையும் பிறப்பித்தது.

தி.மு.க.வின் இந்த துரோகத்திற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மருந்து போடுவதாக அமைந்துள்ளது. தமிழ் உணர்வாளர்களும், சிறுபான்மை மக்களும் தி.மு.க.வின் இரட்டை வேடத்தை முழுமையாக புரிந்துகொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.”

Hits: 5

Leave a Reply

Your email address will not be published.