Sat. Apr 20th, 2024

இந்திய சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி தனது முதலாவது டெஸ்டை மொஹாலியில் விளையாடியது.

டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களமிறங்கிய வீரர்கள் அனைவரும் தங்களது பங்குக்கு ரன்கள் அடித்தனர். ரிசாப் பன்ட் 96 ரன்கள் அடித்தார். இந்திய அணி ரவீந்திர ஜடேஜா 175 ரன்கள் இருக்கும்போது 574 ரன்களில் டிக்ளர் செய்தது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை வீரர்கள் அனைவரும் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் 174 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகினர். இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட் கைப்பற்றியிருந்தார்.

பாலோ ஆன் ஆன இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் 178 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகினர்.இந்திய அணியில் அஸ்வின் 4 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

முடிவில் இந்திய கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது.

Visits: 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *