Fri. Apr 19th, 2024

கே.பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர் , சிபிஐ ( எம் ) அவர்கள் வெளியிட்ட அறிக்கை

நடுவர் மன்றமும் , உச்சநீதிமன்றமும் காவிரியில் கிடைக்கும் மொத்த தண்ணீரில் அந்தந்த மாநிலங்களுக்கான அளவு பங்கீட்டு நீரினை பகிர்ந்தளித்துள்ளது . இந்த வகையில் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு 177.25 டி.எம்.சி. தண்ணீரை அளிக்க வேண்டுமெனவும் இதற்கான அளவீட்டினை பில்லிக்குண்டு என்ற இடத்தில் மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானித்துள்ளது .

இதனடிப்படையிலேயே தமிழகத்திற்கு கிடைக்கும் தண்ணீரை அதாவது பில்லிக்குண்டுவிலிருந்து கீழே கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது . இத்திட்டத்தை எதிர்ப்பதற்கு கர்நாடக அரசுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது .

காவிரியில் தமிழகத்தின் உரிமையை கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது . மழை – வெள்ளம் காலத்தில் கர்நாடகத்தின் வடிகால் பகுதியாகவே தமிழகத்தை கர்நாடக அரசு அணுகுகின்றது . இது சட்டத்திற்கும் இயற்கை நீதிக்கும் எதிரானது .

எனவே ஒகேனக்கல் 2 வது கூட்டுக்குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்த கர்நாடக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என்றும் , தமிழக அரசு தனக்குள்ள உரிமையின்படி இந்தத் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என சிபிஐ ( எம் ) வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது .

Visits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *