மெலனீசியத் தீவுகளில் ஓர் தீவு, தென்மேற்கு பசிபிக் கடல்.
2-ம் உலகப்போர் உக்கிரமாக இருந்த நேரம்.
அந்தத் தீவின் பழங்குடியினர் வெளியுலகு தொடர்பு இன்றி வாழ்ந்து வந்தனர். வெளியாட்களை அதுவரை பார்த்ததே இல்லை.
அப்படி இருந்த போது, போர் காலத்தின் நடுவே ஒருநாள்…
ஜப்பானியப் படைகள் அந்தத் தீவில் இறங்கினர். அது அவர்களுக்கு நேச நாட்டுப்படைகளை எதிர்கொள்ள ஏதுவாக இருந்தது.
இறங்கியதும் அவர்கள் செய்த முதல் வேலை வானூர்தித் தளம் & கட்டுப்பாடு அறை கோபுரம் அமைத்தது.
ராணுவ-வானூர்தி வழியாகத் தான் அந்த வீரர்களுக்குத் தேவையான உணவு, உடை மற்றும் ஆயுதங்கள் ஆகியன கிடைத்தன.
ஆனால் அந்தத் தீவு மக்களோ அவர்களை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
“அட்டேன்ஷன்…!” என ஒருவர் கத்தினார். உடனே சிலர் வேக வேகமாக ஓடிவந்து வரிசையில் நின்றனர்.
சிலர் கட்டுப்பாட்டு அறை உள்ள கோபுரத்திற்கு ஓடினர்.
ஒருவர், வானூர்தித் தளத்தில் நின்று கொண்டு கையை
விரித்துக்கொண்டு மேலே பார்த்தார்.
குட்டி வானூர்தி ஒன்று தரையிறங்கியது. அந்த சைகை காட்டி ஏதோ சமிக்ஞைகளைச் செய்தார்.
வானூர்தி நின்றது. அதிலிருந்து பெட்டி பெட்டியாக இறக்கப்பட்டது அதிலிருந்து சில உணவுகள், ஆடைகள் ஆகியன அந்தப் பழங்குடியினருக்கும் வழங்கப்பட்டன.
எப்போதெல்லாம் வானூர்தி வருகிறதோ அப்போதெல்லாம் சுவையான உணவுகள் அழகிய ஆடைகள் அந்த மக்களுக்கும் கிடைத்தன.
சில நேரங்களில் வானூர்தி மேலிருந்து அவற்றை வீசிவிட்டுச் சென்றன.
கட்டுப்பாட்டு அறையில் வீரர்கள் அவற்றை உறுதி செய்தனர்.
இதற்கு இடையில் போரின் போக்கு மாறியது.
(அமெரிக்க இணைந்த) நேச நாட்டுப்படையினர் ஜப்பானியர்களை வென்றனர். அவர்கள் அந்த மெலனீசியத் தீவுகளைக் கைப்பற்றினர்.
அந்தத் தீவு மக்கள் அவர்களையும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
“அட்டேன்ஷன்!” என ஒருவர் கத்தினார். உடனே சிலர் வேக வேகமாக ஓடிவந்து வரிசையில் நின்றனர்.
சிலர் கட்டுப்பாட்டு அறை உள்ள கோபுரத்திற்கு ஓடினர்.
அவர்களும் வானூர்தித் தளத்தில் நின்று கொண்டு கையை விரித்துக்கொண்டு ஏதேதோ சைகைகள் செய்தனர்.
முன்பு வந்த ஜப்பானியர்கள் என்னவெல்லாம் செய்தனரோ அதனைப் போலவே செய்தனர்.
வானூர்திகள் வந்திறங்கின. சில நேரங்களில் மேலிருந்து பொருட்கள் வீசப்பட்டன.
அப்போதெல்லாம் அந்த மக்களுக்கு உணவும் ஆடையும் கிடைத்தன
போர் முடிந்து அனைத்து வீரர்களும் தத்தம் நாடுகளுக்குத் திரும்பிச் சென்றுவிட்டனர்.
ஆண்டுகள் பல உருண்டோடியது. மீண்டும் சிலர் அந்தத் தீவிற்குச் சென்று பார்த்தால் அதிர்ச்சி!
அவர்களுடன் மெல்லப் பேச்சுக் கொடுத்தப் பின் முழுதுவம் விளங்கியது.
“மேலிருந்து கடவுள் வந்தார். அவர் சிலரை
இங்கு விட்டுச் சென்றார். அவர்கள் பூசைகள் செய்தனர்.
எப்போதெல்லாம் பூசை செய்தனரோ அப்போதெல்லாம் கடவுள் தோன்றி உடனே உணவு ஆடை என பலவற்றை கொடுத்தார். பின் அவர்கள் சென்றுவிட்டனர். அதன் பிறகு வருவதே இல்லை” என்றனர்.
“அந்தக் கடவுள் எப்படி இருப்பார்?”
“அப்படி”
அவர்கள் காட்டியது வானூர்தி
அவர்கள் வானூர்தியை கடவுளாக எண்ணி முங்கிலால் வானூர்தியை செய்து வணங்கி வந்தனர்
அது மட்டுமல்ல. அந்த வீரர்கள் பயன்படுத்திய கட்டுப்பாட்டு அறையை போன்றும் மூங்கிலால் செய்து வைத்துள்ளனர்
மேலும் வீரர்கள் பயன்படுத்திய வாக்கிடாக்கி, ஹெட்ஃபோன், பைனாக்குலர் அகிவற்றையும் செய்து வணங்குகிறனர்
அவ்வப்போது தவறாமல் மூங்கில்களால் துப்பாக்கியைப் போல செய்து நடைபயின்று பூசை செய்கிறனர்.
இவற்றை பற்றி எல்லாம் எடுத்துக் கூறியும் தம் நம்பிக்கையை மாற்ற மறுக்கிறனர்.
இதனை cargo cult எனக் கூறுவர். இணையத்தில் தேடினால் இதைவிட அதிக தகவல் கிடைக்கும்.
Correlation doesn’t imply causation
இதனை “The Improbability Principle” என்ற புத்தகத்தில் David J Hand என்ற Imperial College கணிதப் பேராசிரியர் எழுதியுள்ளார்.
அரிய நிகழ்வுகள், அதிசயங்கள், அதிர்ஷ்டம், அமானுஷ்யம், கடவுள் நம்பிக்கை ஆகியவை ஏற்படும் காரணங்களை கணித வழியில் விளக்குகிறார்.
இதிலிருந்து அதிகம் எழுதுகிறேன். – ஹிலால் ஆலம் (அறிவியல் எழுத்தாளர்)
Hits: 0