Thu. Mar 28th, 2024

இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. மேலும் தொடரை 1-0 கணக்கில் தொடங்கியுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. கேப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் (123), அகர்வால் (60), கோஹ்லி (35) மற்றும் ரஹானே (48) தவிர அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இந்திய அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தென்னாப்பிரிக்கா அணியில் சிறப்பாக பந்துவீசிய நிகிடி 6 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதை தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் முஹமது ஷமியின் சிறப்பான பந்து வீச்சில் 197 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாப்பிரிக்கா அணி சார்பில் பவுமா 54 ரன்களும் , டி காக் 34 ரன்கள் மட்டும் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய முஹமது ஷமி 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதனை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி வீரர்கள் ரபாடா மற்றும் மார்கோ ஜான்சன் இருவரின் சிறப்பான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இந்திய அணி 174 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டும் மற்றும் மார்கோ ஜான்சன் 4 விக்கெட்டும் எடுத்தனர்.

வெற்றிக்கு 305 ரன்கள் எடுத்தால் போதும் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி டீன் எலகர் 77 தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். 191 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளை இழந்து வெற்றி வாய்ப்பை இழந்தது.

இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய முஹமது ஷமி 3 விக்கெட்டும் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்மூலம் இந்திய அணி 113 ரன்கள் விதிசத்தில் வெற்றி. மேலும் தொடரை 1-0 கணக்கில் தொடங்கியுள்ளது.

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *