Fri. Mar 29th, 2024

மதுரை திருமங்கலம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபரை பழிக்குப் பழியாக கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த மருது சேனை அமைப்பின் நிறுவன தலைவர் ஆதிநாராயணன் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டு திருமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை 14 நாள் நீதிமன்றகாவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார் .

திருமங்கலத்தில் பழிக்குபழியாக நடைபெற்ற கொலை சம்பவத்தில் மருதுசேனை அமைப்பின் நிறுவனத் தலைவரும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக கூட்டணி சார்பில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டவருமான ஆதிநாராயணன் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார் .

தேர்தல் சமயத்தில் ஆதிநாராயணன் நீதிமன்ற தடையாணை பெற்றிருந்ததால் போலீசார் அவரைக் கைது செய்யவில்லை . இந்நிலையில் தடை ஆணை நீடிக்கப்படாததையடுத்து மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் உத்தரவின்பேரில் திருமங்கலம் டிஎஸ்பி சிவக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை கள்ளிக்குடியில் உள்ள அலுவலகத்திலிருந்த ஆதிநாராயணனை கைது செய்தனர்.

பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் திருமங்கலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் .

இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்த மாஜிஸ்திரேட் நேற்று முதல் வரும் டிசம்பர் 31 – ஆம் தேதி வரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் .

இதனையடுத்து ஆதிநாராயணன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேலூர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப் பட்டார் .

ஆதிநாராயணன் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தகவல் அறிந்து மருது சேணை அமைப்பின் தொண்டர்கள் அதிகளவில் குவிந்ததால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது .

Visits: 33

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *