Thu. Oct 6th, 2022

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘புஷ்பா’. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் மற்றும் பகத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் ‘ஊ அன்ட்டவா’ என்ற பாடலை ‘புஷ்பா’ படக்குழு யூடியூபில் வெளியிட்டது. இந்தப் பாடலுக்கு சமந்தா நடனமாடியுள்ளார்.

இப்பாடலின் வரிகள் ஆண்களைக் கொச்சைப்படுத்துவதாகக் கூறி ஆண்கள் அமைப்பு ஒன்று ஆந்திர ஐகோர்ட்டில் இப்பாடலைத் தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. முதல் பாகம் டிசம்பர் 17ம் தேதி வெளியாகிறது.

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.