Sat. Apr 20th, 2024

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

“ஒன்றிய அரசு இட ஒதுக்கீட்டு காலி இடங்களை கவனமாக தவிர்ப்பது ஏன் ? சந்தேகத்திற்குரிய அமைச்சரின் பதில்.

நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள எஸ்.சி , எஸ்.டி , ஓ.பி.சி நிலுவைக் காலியிடங்கள் பற்றி எழுப்பிய கேள்விக்கு ( எண் 65 ) கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார் . ஆனால் அந்த பதிலில் பதில் இல்லை என்பதே உண்மை .

எஸ்.சி , எஸ்.டி , ஓ.பி.சி நிலுவைக் காலியிடங்கள் மற்றும் இட ஒதுக்கீடு அல்லாத காலியிடங்கள் எவ்வளவு என்று கேட்டதற்கு தனித் தனியாக எண்ணிக்கையை தராமல் மொத்தமாக 13701 காலியிடங்கள் என பதில் தரப்பட்டுள்ளது . கேள்வியே மொத்த காலியிடங்கள் என்று ஒரு வரியில் கேட்கப்பட்டு இருந்தால் வேறு விசயம் . ஆனால் பிரிவு வாரியாக கேள்வி இருக்கும் போது மொத்த எண்ணிக்கையை பதிலாக தருவதன் நோக்கம் என்ன ?

இருந்தாலும் இவ்வளவு காலியிடங்கள் இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது . எஸ்.சி , எஸ்.டி , ஓ.பி.சி நிலுவைக் காலியிடங்களும் ஆயிரக் கணக்கில் உள்ளன என்பதில் ஐயமில்லை .

இடஒதுக்கீட்டு ரோஸ்டர்களை தயாரிப்பதில் எந்த மத்திய கல்வி நிறுவனமாவது சிரமங்கள் இருப்பதாக அரசின் வழிகாட்டுதல்களை கோரியுள்ளதா ? என்ற கேள்விக்கு இல்லை என அமைச்சர் பதில் அளித்துள்ளார் . அப்படியெனில் எல்லா மத்திய கல்வி நிறுவனங்களும் ரோஸ்டர்களை தயாரித்து இருக்க வேண்டும் . இதை அரசாங்கம் சரி பார்ப்பதோடு அந்தந்த நிறுவனங்கள் ரோஸ்டர் விவரங்களை பொது வெளியில் வெளியிட வேண்டும் .

கடைசி கேள்வியாக ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ள ” செயல் வடிவ பணி நியமனங்கள் ” ( Mission Mode Recruitment ) சம்பந்தமான பதவி வாரியாக , பிரிவு வாரியாக விவரங்கள் வேண்டுமென்ற கேள்விக்கும் தகவல்கள் தரப்படவில்லை . மாறாக ” செயல் வடிவ பணி நியமனங்கள் ” ( Mission Mode Recruitment ) 05.09.2021 இல் இருந்து 04.09.2022 வரைக்குள்ளாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற தகவல் மட்டும் தரப்பட்டுள்ளது . இட ஒதுக்கீட்டு காலியிடங்கள் எவ்வளவு என்ற விவரங்களை இவ்வளவு கவனமாக தவிர்ப்பது ஏன் ?

அரை குறை பதில்கள் இந்த கேள்வியின் உள்ளடக்கத்தையே சிதைப்பதாக உள்ளது . சமூக நீதி மீது அரசுக்கு அக்கறை உள்ளதா ? இந்த ” செயல் வடிவ பணி நியமனங்கள் ” ( Mission Mode Recruitment ) இடஒதுக்கீடு பிரிவினரின் உரிமைகளை உறுதி செய்யுமா ? என்ற கேள்விகள் எல்லாம் பதில் தேடி நிற்கின்றன .”

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *