Fri. Mar 29th, 2024

பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வுகளை பற்றி ஆசிரியர் பரத் அவர்கள் எழுதிய கட்டுரை

“CSE – COMPREHENSIVE SEXUALITY EDUCATION:
1994 வளர் இளம்பருவத்தினரின் தேவை என்ன அப்படிங்குறத கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு விஷயம் தான் பாலியல் கல்வி. இப்ப வரை இது ஏன் தேவைனு சரியா புரியாதவங்கதான் பலர்.

பாலியல் கல்வி குறித்த முதல் கட்டுக்கதை இது பாலுணர்வை தூண்டும். இதன் முக்கிய நோக்கமே பாலுணர்வை நெறிப்படுத்துவது மட்டும்தான்.

கட்டுக்கதை2: நம் கலாச்சாரத்துக்கும் பன்பாட்டிற்கும் எதிரானது.
உண்மை : விழுமியங்களை கற்பித்து உணர்வுகளை வலுப்படுத்தும்.

கட்டுக்கதை3: உடலுறவு செய்வதுகுறித்து கற்பிக்கப்படும்.
உண்மை: provides age and developmental appropriate
information and skills to help young people delay
sexual initiation and to protect themselves when
they do become sexually active

இப்படி நிறைய தவறான கற்பனைகளை உடைக்கனும் முதல்ல அப்பறம் இந்த பாலியல் கல்வியை செக்ஸூடன் தொடர்புபடுத்துவதை நிறுத்தி ஆண் பெண் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அதன் காரணங்கள் விளைவுகள் (changes,reasons, impacts) இதை தான் முதலில் தெளிவுபடுத்தும்.

தொடக்கப்பள்ளியில் தங்களின் உடல் குறித்த அறிமுகம் மாணவர்களுக்கு தரப்பட வேண்டும். இந்த good/bad touch இதன் நீட்சிதான். ஏன் சில பாகங்களை மறைத்து வைக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.

அடுத்து உயர்நிலையில் உடலில் ஏற்படும் மாற்றங்களை படிப்படியாக விளக்க வேண்டும்.

ஊர்ல ஏன்டா பரு வந்துதுனு கேட்டா பத்துக்கு எட்டு பேர் எதிர்பாலினம் சைட் அடிக்குறதால வருதுனு சொல்லுவாங்க ஆனா அது ஹார்மோன் மாற்றங்கள்னு சொல்லி புரிய வைக்கனும். இந்த எட்டாக் கிளாஸ் முடியபோறப்பதான் அவர்களின் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும். அந்த நேரத்துல அவர்களின் உடலில் அதிகமாக வியர்வை பெருகும், உடலின் ப்ரைவேட் பார்ட் களில் ரோமங்களின் வளர்ச்சி தொடங்கும். ஆண்பிள்ளை குரல் உடையும், பெண் பிளளைகளின் உடலில் திடீர் மாறுதல் தோன்றும் உதாரணமாக மார்பகங்களின் வளர்ச்சி, பருவமடைதல் இதெல்லாம் நடக்கும். இதெல்லாம் தெளிவான காரணங்களோடு விளக்க வேண்டும்.

அப்பறம் இந்த நேரம் மாணவிகளுக்கு அவர்களின் மாதவிடாய் குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும். அந்த நேரங்களில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார விஷயங்களை கற்பிக்க வேண்டும். பசங்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேற்றம் முதலில் தொடங்கலாம். இந்த நேரத்தில் சரியா வழிகாட்டப்படாத மாணவனுக்கு கிடைக்கும் முதல் தகவல் ஒரு துளி விந்து எட்டு சொட்டு இரத்தம், ஆம்பளையே இல்லை அது இதுனு ஏதாவது ஒரு சித்த வைத்தியர் டிவில மிரட்ட ஆரம்பிச்சு அவனை குற்ற உணர்வுக்குள் தள்ளிடுவார். இது குறித்து கற்பிக்க வேண்டிய முழு பொறுப்பையும் ஆசிரியர்களுக்கு உண்டு. அப்பறம் இந்த பாலுறுப்புகள் எப்படி இயங்குதுனும் அவர்களுக்கு சொல்லி தரனும்.

மேல்நிலை வகுப்புகளுக்குவரும் நேரத்தில் அவர்களுக்கு பால்வினை நோய்கள் பற்றியும், நோய்த்தடுப்பு முறைகள் பற்றியும் தெளிவாக கற்பிக்க வேண்டும். குறிப்பாக கருத்தடை சாதனம் என்பது கருவுறுதல் தடுக்க இல்லை அது ஒரு பாதுகாப்பு வழிமுறைனு புரிய வைக்க வேண்டும். காண்டம் பற்றியும் காப்பர் டி பற்றியும் காண்ட்ரா செப்டிவ் பில்ஸ் பற்றியும் சொல்லித்தரனும்.

இத்தோடு முடிஞ்சுதா இல்லை இல்லவே இல்லை.
எதிர்பாலின புரிதலை மேம்படுத்த வேண்டும். பாலியல் கல்வியின் மிக முக்கிய நோக்கம் பால் சார்ந்த பிரிவினை எந்த வகையிலும் பார்க்கக்கூடாது என்பதாகும். எனவே sexual descrimination தவறு என்பதை தெளிவாக புரிய வைப்பதுடன், sexual violence எந்த அளவு தவறு என்பதை புரிய வைக்கவேண்டும். பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் மாணவர்கள் உடனடியாக தானே தவறு செய்ததாக ஏற்படும் குற்றவுணர்வில் இருந்து அவர்களை மீட்டு அவர்களை வெளிப்படையாக பேச அறிவுறுத்த வேண்டும்,

பாலியல் சீண்டல்கள் எந்த இடத்திலும் அனுமதிக்கப்படாத ஒன்று என்ற எண்ணங்களை தொடர்ந்து அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அதன்பிறகு பாலியல் குற்றங்களுக்கு தரப்படும் தண்டனைகள் பற்றி அனைத்து மாணவர்களுக்கும் விளக்க கையேடை வழங்கி அந்த சட்டங்கள் குறித்த புரிதலை உருவாக்க வேண்டும்.பள்ளிகளில் மனநல ஆலோசகர் ஒருவரை நியமிப்பதன் அவசியத்தையும் அவரின் பணி குறித்தும் பிள்ளைகளிடம் கூறி ஏதேனும் உளவியல் சிக்கல் வரும்போது அவரை அனுகவேண்டிய அவசியத்தையும் கற்பிக்க வேண்டும். இவை அனைத்தையும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு விஷயம்தான் COMPREHENSIVE SEXUALITY EDUCATION(CSE).

ஆனால் இதையெல்லாம் விடுத்து சில மதவாத சக்திகளின் தவறான புரிதல் காரணமாக இந்தியாவில் இதனை இன்னும் பரவலாக நம்மால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. மிகச் சுருக்கமாக இது நடைமுறைபடுத்தப்படுமாயின்

  1. பிள்ளைகளுக்கு அவர்களின் உடல்குறித்த புரிதல் ஏற்படும்.
  2. பாலியல் சீண்டல்களுக்கு எதிராக தங்களின் குரலை பதிவு செய்ய முடியும்.
  3. பாலியல் வன்முறை குறையும்.
  4. பாலியல் நோய்கள் பற்றிய அறிவு வளரும்.
  5. முறைப்படுத்தப்பட்ட கருத்தடை சாதனம் குறித்த புரிதல் ஏற்படும்.
  6. பாலியல் வேறுபாட்டால் நடைபெறும் அடக்குமுறை முடிவுக்கு வரும்.
  7. சக தோழர் தோழிகளை சமமாக நடத்துவார்கள்
  8. வெளிப்படையாகவே பாலியல் சீண்டல்களுக்கு எதிரான குரல்களை எழுப்புவார்கள்.

இவ்வளவு விஷயங்களையும் செய்யாமல் பிள்ளைகள் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொள்வதையோ அல்லது அதீத மன அழுத்தத்திற்கு ஆளவதையோ நம்மால் தடுக்க இயலாது.

இது பாலியல் கல்வி குறித்த முதல் பகுதி மட்டுமே. இது குறித்த கட்டுரைகளை ஒரு பகுதியில் நிறைவு செய்ய இயலாது. எனவே அடுத்தடுத்த பகுதிகளாக தொடர்ந்து எழுதுவோம். தொடர்ந்து பேசுவோம். மாற்றுக்கருத்துக்களை கண்டிப்பாக முன்வைக்கவும்.” – ஆசிரியர் பரத்

Visits: 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *